குழந்தை பெற ஆசைப்படும் ராஷ்மிகா
நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள `தி கேர்ள் ஃப்ரண்ட்’ என்ற படம், வரும் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த ஆண்டில் ராஷ்மிகா மந்தனா நடித்த `சிக்கந்தர்’, `குபேரா’, `தாம்மா’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்நிலையில், `தி கேர்ள் ஃப்ரண்ட்’ படம் சம்பந்தமாக ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், `இருபது முதல் முப்பது வயது வரை, தலையை கீழே குனிந்து வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். காரணம், சமூகம் நமக்கு அதைத்தான் சொல்லி வளர்த்திருக்கிறது. நாம் நமது வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், அதற்கு நமக்கு அதிக பணம் வேண்டும். முப்பது முதல் நாற்பது வயது வரை, கடுமையான பணிகளுடன்தான் வாழ்க்கை நகரும்.
நாற்பது வயதில் என்ன நடக்கும் என்பது பற்றி எல்லாம் நான் சிந்திக்கவில்லை. இன்னும் நான் தாயாகவில்லை. நான் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பேன் என்பதும் எனக்கு தெரியும். இதுபோன்ற பல நல்ல விஷயங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். இன்னும் பிறக்காத அந்த குழந்தைகளுக்காக நிறைய விஷயங்களை ஆழ்ந்து யோசிக்கிறேன். நான் அவர்களுக்கு அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் அவர்களை பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள நினைத்துள்ளேன். போருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட, அவர்களுக்காக நான் அவர்களுடன் செல்ல வேண்டும்’ என்றார். நீண்ட நாட்கள் கழித்து அவர் பேசிய இவ்விஷயம், இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
 
 