தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தாக்குதலை கண்டுகொள்ளாத சிரஞ்சீவி

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். நேற்று ஐதராபாத்தில் நடந்த ரத்த தான முகாமில் சிரஞ்சீவி, தேஜா சஜ்ஜா கலந்துகொண்டனர். அப்போது சிரஞ்சீவி பேசுகையில், ‘ரத்த வங்கிகளின் தேவை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அறிவுறுத்தி இருந்தார். அவர் எழுதிய கட்டுரையை படித்த...

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். நேற்று ஐதராபாத்தில் நடந்த ரத்த தான முகாமில் சிரஞ்சீவி, தேஜா சஜ்ஜா கலந்துகொண்டனர். அப்போது சிரஞ்சீவி பேசுகையில், ‘ரத்த வங்கிகளின் தேவை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அறிவுறுத்தி இருந்தார். அவர் எழுதிய கட்டுரையை படித்த பிறகே ரத்த வங்கியை தொடங்கினேன். அந்த பத்திரிகையாளரை நான் சந்தித்தது இல்லை. எனக்கு இந்த சிந்தனையை கொடுத்த அவருக்கு எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறேன். என்னை தாக்குபவர்களுக்கு நான் எளிதான இலக்கு என்பது எனக்கு தெரியும்.

இன்றைய சமூக ஊடகங்களில் நான் தாக்கப்படும்போது, ஏன் மவுனமாக இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். நான் செய்து வரும் நல்ல செயல்களும், அதனால் எனக்கு கிடைத்த அன்பும் எனது கேடயங்களாக இருக்கின்றன என்று அவர்களிடம் நான் சொன்னேன். அவை எனக்காக பேசும். ஒருமுறை ஒரு அரசியல் விமர்சனத்தில் என்னை ஒருவர் காயப்படுத்தினார். பிறகு எனது ரத்த வங்கியின் மூலம் அவரது மகள் உயிருடன் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுபோன்ற சில நிகழ்வுகள் எனக்கு வலிமையை கொடுத்து, எனது சேவையில் தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன’ என்றார்.