சினிமாவில் ஆண், பெண் வேறுபாடு இல்லை: ‘அம்மா’ தலைவர் ஸ்வேதா மேனன்
சென்னை: ‘அம்மா’ (AMMA) என்று சொல்லப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 31 வருட மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ என்ற அமைப்பின் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளது, வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். 51 வயது நிரம்பிய ஸ்வேதா மேனன் கூறுகையில், ‘மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’வில்,...
சென்னை: ‘அம்மா’ (AMMA) என்று சொல்லப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 31 வருட மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ என்ற அமைப்பின் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளது, வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். 51 வயது நிரம்பிய ஸ்வேதா மேனன் கூறுகையில், ‘மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’வில், தலைவராக ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
இப்போது பெயருக்கு ஏற்றபடி அம்மாவாக, பெண்ணாக மாறிவிட்டது. இப்போதுதான் சங்கம் முதல் முறையாக பெண் தலைமையை ஏற்றுள்ளது. சினிமாவில் ஆண், பெண் வேறுபாடு இல்லை என்று நம்புகிறேன். படங்களில் அனைவரும் கதாபாத்திரங்கள்தான். எந்த கேள்வியையும், விமர்சனத்தையும் தைரியமாக முன்வையுங்கள். தலைவர் பதவியில் நான் நேர்மையுடன் பணியாற்றுவேன்’ என்றார்.