தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

நெருக்கமான காட்சிகளுக்கு ஓகே சொல்லும் ஸ்ரத்தா

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கேமியோ ரோல் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரத்தா நாத். தொடர்ந்து ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘மாறா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘இருகப்பற்று’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ என்ற படத்திலும், நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும்...

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கேமியோ ரோல் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரத்தா நாத். தொடர்ந்து ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘மாறா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘இருகப்பற்று’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ என்ற படத்திலும், நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோ கோட்’ என்ற படத்திலும் ஸ்ரத்தா நாத் நடித்து வருகிறார்.

நல்ல நடிகை என்ற பெயர் பெற்றாலும் வருடத்திற்கு 2 தமிழ் படத்திலாவது நடிக்கலாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழில் படங்கள் நடிக்க தாமதம் ஏன்? என்பது குறித்து ஸ்ரத்தா நாத் மனம் திறந்துள்ளார்.

அவர் பேசும்போது, ‘‘தரமான கதைகளுக்காக நான் காத்திருப்பது தான் இந்த தாமதத்துக்கு காரணம் என்று நினைக்கிறேன். கிடைத்த படங்களை எல்லாம் நடித்துவிட வேண்டும் என்பது என் ஆசையில்லை. இது எனது இமேஜ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒவ்வொரு கதைகளையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறேன். என்னை நல்ல நடிகை என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். அதை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன். கதைக்கு தேவையாக இருந்தால், மிகவும் முக்கியமான காட்சியாக இருந்தால் மட்டுமே நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன்’’ என்றார்.