தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

நெருக்கமான காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன்: கிரித்தி ஷெட்டி கறார்

சென்னை: ‘உப்பெனா’ படத்தின் மூலம் பிரபலமான கிரித்தி ஷெட்டிக்கு பின்னர் பல வாய்ப்புகள் குவிந்தன. இளைஞர்கள் மத்தியில் அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.‘உப்பெனா’வுக்குப் பிறகு நானியுடன் ஜோடி சேர்ந்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதில் சாய் பல்லவிக்குக் கிடைத்த அளவுக்குக் கிரித்திக்குப் பெயர் கிடைக்கவில்லை. இதனால் அவர் விரக்தி...

சென்னை: ‘உப்பெனா’ படத்தின் மூலம் பிரபலமான கிரித்தி ஷெட்டிக்கு பின்னர் பல வாய்ப்புகள் குவிந்தன. இளைஞர்கள் மத்தியில் அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.‘உப்பெனா’வுக்குப் பிறகு நானியுடன் ஜோடி சேர்ந்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதில் சாய் பல்லவிக்குக் கிடைத்த அளவுக்குக் கிரித்திக்குப் பெயர் கிடைக்கவில்லை.

இதனால் அவர் விரக்தி அடைந்தார். ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்தது சங்கடமாக இருந்ததாகவும், இனி அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் கிரித்தி தற்போது கூறியுள்ளார்.‘உப்பெனா’வுக்குப் பிறகு ‘பங்காரு ராஜு’ தவிர மற்ற படங்கள் எதுவும் கிரித்திக்குக் கைகொடுக்கவில்லை. தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளார். இதனால் தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தை அவர் எதிர்பார்த்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.