தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கோல்ட் கால் டீசர் வெளியானது

சென்னை: “கோல்ட் கால்” டீசரை படகுழுவினர் வெளியிட்டனர். “கோல்ட் கால்” ஒரு விறுவிறுப்பான கதையையும், ஒரு பீதியூட்டும் சூழலையும் கலந்த ஒரு முயற்சி. விற்பனையாளர் அலுவலக வேளைகளில், விற்பனைக்கு அப்பால் களத்தில் செய்வதைக் குறித்து பேசுகிறது. கதை நகரும் போது, ஒவ்வொரு காட்சியும் பார்வையாளரிடமிருந்து சிரிப்பை கிளப்புவதே முதன்மையான நோக்கமாக அமைந்துள்ளது.

புதுமுக இயக்குனர் தம்பிதுரை இயக்கத்தில், கேஷவமூர்த்தி தயாரிப்பில், M/s. Walkthrough Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இந்த கோல்ட் கால், தனது தனித்துவமான தலைப்பு மற்றும் சுவாரஸ்யமான கருத்தால் ஏற்கனவே தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர், படக்குழு உருவாக்கியுள்ள அந்த விறுவிறுப்பான உலகத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது. சந்தோஷ், சித்து மூளிமணி உள்பட புதுமுகங்கள் பலர் நடித்துள்ளார்.

இயக்குனர் தம்பிதுரை கூறும்போது, ‘‘கோல்ட் கால் இன்றைய பார்வையாளர்களோடு ஆழமாக இணையும் ஒரு கதை. தலைப்பு டீசர் என்பது சஸ்பென்ஸ், நகைச்சுவை, டிராமா ஆகியவை, படத்தின் சிறு சுவையை மட்டும் தருகிறது’’ என்றார். தயாரிப்பாளர் கேஷவமூர்த்தி, ‘‘கோல்ட் கால் படத்தை உயிர்ப்பிக்கக் இந்த குழு உள்ளம் கனிந்து உழைத்துள்ளது. இந்த டீசர் ஒரு துவக்கமே’’ என்றார்.