தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கல்லூரி மாணவிகளுக்கு பரிசு பட ஷோ

சென்னை: பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவானதும் ரிலீசுக்கு முன் அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள். அது செலிபிரிட்டி ஷோ என்று அழைக்கப்படும். இந்நிலையில் ‘பரிசு’ திரைப்படத்தை கல்லூரி மாணவிகளுக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளனர்.

சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது. படத்தின் கதை மையம் கொள்ளும் பிரதான பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவி, விவசாயம் செய்யும் பெண், ராணுவ வீராங்கனை என்று மூன்று மாறுபட்ட விதங்களில் தனது நடிப்புத் திறமையைக் வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெய் பாலா, கிரண் பிரதீப், நடித்துள்ளார்கள். மேலும் ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு, பேய் கிருஷ்ணன் நடித்துள்ளனர். ‘பரிசு’ திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார் கலா அல்லூரி. இவரே தனது கலா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கிறார். இவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர். ஒளிப்பதிவு -சங்கர் செல்வராஜ், இசை - ராஜீஷ், பின்னணி இசை - சி.வி. ஹமரா. அக்.31ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.