காமெடி கலாட்டா கதை கல்யாண மன்னன்
சென்னை: மலேசியாவில் 999, லக்கி நன், ஹார்பர் ஆகிய படங்களை தயாரித்து, இயக்கி நடித்தவர் நடிகை மேக்னா. இவர் அடுத்ததாக தயாரித்து நடிக்கும் படம் கல்யாண மன்னன். இதற்கு ஃபைவ் ஒயிஃப் மை லைஃப் என்ற டேக்லைன் தரப்பட்டுள்ளது. ஒரு காதலி கூட கிடைக்காமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் இளைஞனுக்கு 5 மனைவிகள் அமைந்தால் என்ன ஆகும் என்பதுதான் கதை. முழு நீள காமெடி படமாக இந்த படம் உருவாகிறது. மற்ற ஹீரோயின்களாக மீனாட்சி, தீபிகா, ஸ்னேகா, ரன்விதா சென்னப்பா ஆகியோர் நடிக்கிறார்கள். சந்தானபாரதி, மகாநதி சங்கர், டிஎஸ்ஆர் உள்பட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தை எழுதி, தயாரித்து, கதையின் நாயகனாக பி.வி.காவியன் நடிக்கிறார். ஒளிப்பதிவு - கே.எஸ்.முத்து மனோகரன். இசை - சார்லஸ் டானா. எடிட்டிங் - எம்.கே. விக்கி. இணை தயாரிப்பு - ராஜேஸ், என்.கோவிந்தசாமி, குழந்தைவேலு, சாம்ராஜ்.