தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கருத்து சொல்லும் யெல்லோ: பூர்ணிமா ரவி

சென்னை: கோவை பிலிம் பேக்டரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிக்க, ஹரி மகாதேவன் இயக்கியுள்ள படம், ‘யெல்லோ’. வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, லீலா சாம்சன், டெல்லி கணேஷ், பிரபு சாலமன், வினோதினி வைத்தியநாதன் நடித்துள்ளனர். அபி ஆத்விக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் காசிநாத், கிளிஃபி கிரிஷ் இசை அமைத்துள்ளனர். வரும் 21ம் தேதி உத்ரா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பூர்ணிமா ரவி பேசும்போது, ‘இந்த படம், கொரில்லா மேக்கிங் ஸ்டைல். பல தடைகள் ஏற்பட்டாலும், முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். இந்த உலகம் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். அதுபோன்ற ஆச்சரியங்கள்தான் இப்படத்தின் மையக்கருத்து’ என்றார்.