சுஷாந்த் மரணத்துடன் ஏதோ தொடர்பு? மீண்டும் கதறிய தனுஸ்ரீ தத்தா
மும்பை: சமீபத்தில் வீடியோ வெளியிட்டு கதறிய தனுஸ்ரீ தத்தா, நடிகர் சுஷாந்த் மரணத்துடன் ஏதோ தொடர்பு இருப்பதாக உணர்வதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக எனது வீட்டில் தொடர் துன்புறுத்தல்களையும், உயிருக்கு அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன் என்று கூறி உதவி கோரினார். இந்த வீடியோவை ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ (விளம்பரத்திற்காக) என சிலர் விமர்சித்த நிலையில், இதுகுறித்து அவர் அளித்த மற்றொரு பேட்டியில், ‘நான் ஒன்றும் நாடகமாடவில்லை;
பல ஆண்டுகளாக நான் அனுபவித்த வலி, மன அழுத்தம் மற்றும் பயத்தினை வௌிப்படுத்தினேன். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் நடிக்கவிருந்தேன். தற்போது தனக்கு நேரும் துன்புறுத்தல்களுக்கும், சுஷாந்தின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். அமைதியான, ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து வரும் என்னை, ஊடகங்கள் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன” என குமுறலுடன் தெரிவித்துள்ளார்.