கட்டிட தொழிலாளி இயக்கிய படம் வீரத்தமிழச்சி
சென்னை: மகிழினி கலைக்கூடம் சார்பில் சாரதா மணிவண்ணன், மகிழினி தயாரித்துள்ள படம், ‘வீரத்தமிழச்சி’. சுரேஷ் பாரதி எழுதி இயக்கியுள்ளார். சஞ்சீவ் வெங்கட், இளயா, ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி, கே.ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி நடித்துள்ளனர். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜூபின் இசை அமைத்துள்ளார்.
விவேகா, செந்தில் ராஜா பாடல்கள் எழுதியுள்ளனர். படம் குறித்து சுரேஷ் பாரதி கூறுகையில், ‘கட்டிட தொழிலாளியாக 35 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றிய நான், இன்று இயக்குனராக மாற எனது மனைவியும், மகன்களும்தான் முக்கிய காரணம். இப்படத்தை 5 வருடங்களாக இயக்கி முடித்தேன். முன்னதாக 18 குறும்படங்களை இயக்கியுள்ளேன். பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படமாக ‘வீரத்தமிழச்சி’ உருவாகியுள்ளது’ என்றார்.