தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

"நாடும் நாட்டு மக்களும்"..! படப்பிடிப்புடன் தொடங்கியது சூது கவ்வும் 2

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் சூது கவ்வும். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பாக சி. வி. குமார் தயாரித்திருந்தார். வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு போஸ்டர் உடன் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

சூது கவ்வும் 2 என்ற தலைப்பிற்கு கீழே நாடும் நாட்டு மக்களும் என்ற துணை தலைப்பு போடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கிய நிலையில் இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே.அர்ஜுன் என்பவர் இயக்குகிறார். மேலும் முதல்பாகத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடித்த நிலையில் தற்போது இரண்டாம் பக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கப் போகிறார். அவருடன் கருணாகரனும் நடிக்க உள்ளார்.