குற்றம் புதிது ஹீரோவுக்கு கொரில்லாவாக நடிக்க பயிற்சி
சென்னை: நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கியுள்ள படம், ‘குற்றம் புதிது’. தருண் விஜய், ‘பரமசிவன் பாத்திமா’ சேஷ்விதா கனிமொழி, மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, ‘பாய்ஸ்’ ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்துள்ளனர். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் பி.கிருபா இசை அமைத்துள்ளார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது. வரும் 29ம் தேதி உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா படத்தை வெளியிடுகிறார்.
இதில் நடித்தது குறித்து தருண் விஜய் கூறியதாவது: திருவள்ளூரை சேர்ந்த எனது குடும்பத்தினர் அனைவரும் டாக்டர்கள். நான் மட்டும் ஆக்டர். தனியார் கல்லூரியில் பி.காம் படித்தபோது நடிப்பு, நடனம், சண்ைடப் பயிற்சி பெற்றேன். அப்பாவிடம் டைரக்டர் பேசியபோது, பைலட் படம் இயக்கி காட்டச் சொன்னார். அதன்படி டைரக்டர் என்னை வைத்து பைலட் பிலிம் இயக்கி னார். அதில் எனது நடிப்பை பார்த்து வியந்த அப்பா, பிறகு இப்படத்தை தயாரிக்க முன்வந்தார். இது ஒரு முழுநீள இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
சீரியல் கில்லரான நான் செய்யும் குற்றங்கள், இதுவரை யாரும் யோசிக்காத கோணத்தில் இருக்கும். அதை போலீசார் கண்டுபிடித்தார்களா என்பது கதை. கிரைம் என்றாலும் தந்தை, மகளின் பாசத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். கொரில்லா குரங்கு போல் கை, கால்களை ஊன்றி நடப்பதற்காக 3 மாதங்கள் வரை பயிற்சி பெற்றேன். எனது கை விரல் களை மடக்கியபடி தரையில் ஊன்றி, கைகளை முன்னும் பின்னும் அசைத்து நடந்தபோது எனது தோள்பட்டை வீங்கிவிட்டது. அந்த வலியை பொறுத்துக்கொண்டு நான் 100 சதவீதம் கடுமையாக உழைத்தேன். இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் 3 மாதங்கள் ஒர்க்ஷாப் நடத்தப்பட்டது.