கிரைம் திரில்லர் பெண் கோட்
சென்னை: ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள். இந்த அடிப்படையில் உருவாகி இருப்பது தான் ‘பெண்கோட்’ திரைப்படம். மலையாளப் படக்குழுவினர் உருவாக்கி உள்ள இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பரபரப்பான க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் ராஜ் பூத்தணல் எழுதி இயக்கியுள்ளார்.
ஆஸ்த்திரியா மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎன்கேஎல் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரவிதா ஆர். பிரசன்னா, ஜெய் நித்ய காசி லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அருண் சாக்கோவும், சரீஷ் தேவும் இப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். லட்சுமி சாந்தா மற்றும் சோனா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
திரவிய பாண்டியன்,கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அருண் ராஜா ஒளிப்பதிவு. தினேஷ் பாண்டியன் இசை. நிர்வாகத் தயாரிப்பு - அன்வர் கபூரான், திவ்யா வருண், பிந்து வின்சென்ட். இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார். நவம்பர் முதல் வாரத்தில் ஜேஎன்கேஎல் ரிலீஸ் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும்.