தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விமர்சகர்களுக்கு தனுஷ் கடும் எச்சரிக்கை

தமிழில் ‘ப.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் எழுதி இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ என்ற படம், வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. முக்கிய வேடங்களில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ் நடித்துள்ளனர். வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் சம்பந்தமான புரமோஷனில் பேசிய தனுஷ், ‘ஒரு படம் காலையில் 9 மணிக்கு ரிலீசாகிறது என்றால், நண்பகல் 12 மணிக்கு பிறகுதான் விமர்சனங்கள் வரும். ஆனால், சில விமர்சனங்கள் காலையில் 8 மணிக்கே வந்துவிடும். அதாவது, ஒரு படம் திரையிடுவதற்கு முன்பே வந்துவிடும்.

அப்படிப்பட்ட விமர்சனங்களை தயவுசெய்து நம்பாதீர்கள். ஒரு படத்தை நீங்கள் பார்த்துவிட்டு, அது எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். இல்லை என்றால், உங்கள் நண்பர்கள் அந்த படத்தை பார்த்துவிட்டு, என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள். காரணம், சினிமாவை நம்பி லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். பல்வேறு தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கிறது. எனவே, ரிலீசாகும் எல்லோருடைய படமும் ஓடி வெற்றிபெற வேண்டும். அது எல்லாமே ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. சரியான விமர்சனங்களை பார்த்துவிட்டு, படித்துவிட்டு அந்த படங்களை பார்க்கலாமா, வேண்டாமா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.