கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறேனா? கும்பமேளா அழகி குமுறல்
மும்பை: உத்தரபிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் பாசிமணி விற்றவர், மோனலிசா. தனது அழகு, பேச்சு மற்றும் காந்த விழிகளால் இந்திய அளவில் வைரலான அவரது வாழ்க்கை ஒரேநாளில் மாறிவிட்டது. தற்போது ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில ஓடிடி நிறுவனங்கள் அவரை வெப்தொடரில் நடிக்க...
மும்பை: உத்தரபிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் பாசிமணி விற்றவர், மோனலிசா. தனது அழகு, பேச்சு மற்றும் காந்த விழிகளால் இந்திய அளவில் வைரலான அவரது வாழ்க்கை ஒரேநாளில் மாறிவிட்டது. தற்போது ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
சில ஓடிடி நிறுவனங்கள் அவரை வெப்தொடரில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மோனலிசா கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக வெளியான தகவலால் மிகவும் வருத்தப்படும் அவர், ‘எனக்கு மகா கும்பமேளாவில் இருந்தபோதும், தாய் கங்கம்மா அருளினாலும் சிறிதளவு பணம் கிடைத்தது. பலர் நினைப்பது போல் நான் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கவில்லை’ என்றார்.