தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கூட்ட நெரிசலில் சிக்கிய பிரியங்கா மோகன் அத்துமீறிய ரசிகர்கள்

ஐதராபாத்: தமிழில் சூர்யா ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷ் ஜோடியாக ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனுடன் ‘டான்’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி இருந்த பிரியங்கா மோகன், தற்போது கவின் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘ஓஜி’ என்ற படம் கடந்த செப்.25ம் தேதி திரைக்கு வந்தது.

இப்படியான நிலையில் ஐதராபாத்தில் ஒரு துணிக்கடையை திறந்து வைத்திருக்கிறார் பிரியங்கா மோகன். அந்த கடையை அவர் திறந்து வைக்க வருகிறார் என்றதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடியுள்ளார்கள். இதன் காரணமாக தனது காரில் இருந்து கடையை நோக்கி சென்ற பிரியங்கா மோகனை ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொள்ள அவரை கடும் சிரமத்துக்கு இடையே விழா ஒருங்கிணைப்பாளர்கள் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ரசிகர்களின் தள்ளுமுள்ளு அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கினார் பிரியங்கா மோகன். அப்போது சில ரசிகர்கள் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரியங்கா மோகன் கடும் கோபம் அடைந்தார். விழா குழுவினரை அவர் கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.