தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மகளின் பிறந்தநாளுக்கு தீபிகா கொடுத்த பரிசு

இந்தியாவின் முன்னணி நடிகையான இருக்கும் தீபிகா படுகோன் தற்போது ஷாரூக்கானுடன் ‘கிங்’ ,மற்றும் சன் பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் அட்லி இயக்கும் பான் வேர்ல்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோன் கடந்த 2018ம் ஆண்டு அவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம்...

இந்தியாவின் முன்னணி நடிகையான இருக்கும் தீபிகா படுகோன் தற்போது ஷாரூக்கானுடன் ‘கிங்’ ,மற்றும் சன் பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் அட்லி இயக்கும் பான் வேர்ல்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோன் கடந்த 2018ம் ஆண்டு அவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் துவா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது துவாவுக்கு 1 வயதாகிறது. கடந்த 8ம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகளின் முதல் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடியுள்ளனர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன்.

மகளின் பிறந்தநாளுக்கு தன் கையாலேயே கேக் செய்துள்ளார் தீபிகா. இதன் போட்டோவை தனது இன்ஸ்டா கிராமில் பகிர்ந்து ”எனது அன்பின் மொழி, என் மகளின் முதல் பிறந்தநாளுக்கு கேக் செய்தேன்” என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இதுதான் ஒரு தாய் தன் மகளுக்கு கொடுக்கும் விலைமதிப்பில்லாத பரிசு எனவும் துவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.