டிசம்பர் 5ல் ‘வா வாத்தியார்’ ரிலீஸ்
கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி, ஜி.எம்.சுந்தர் நடித்துள்ள படம், ‘வா வாத்தியார்’. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
வெற்றி எடிட்டிங் செய்ய, டி.ஆர்.கே.கிரண் அரங்கம் அமைத்துள்ளார். அனல் அரசு சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். மிகவும் வித்தியாசமான கேரக்டரில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தின் டிரைலர், இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி படம் ரிலீசாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.