தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

இந்திய சினிமாவுக்கு புது கவுரவம்: ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்தார் தீபிகா படுகோன்

லாஸ்ஏஞ்சல்ஸ்: 2026ம் ஆண்டுக்கான ‘ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்’ என்ற கவுரவத்தை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் வர்த்தக சபை நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. மோஷன் பிக்சர் பிரிவில் இவர் தேர்வாகி உள்ளார். இதன்மூலம் இந்த கவுரவத்தை பெறும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார். தீபிகா உடன்...

லாஸ்ஏஞ்சல்ஸ்: 2026ம் ஆண்டுக்கான ‘ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்’ என்ற கவுரவத்தை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் வர்த்தக சபை நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. மோஷன் பிக்சர் பிரிவில் இவர் தேர்வாகி உள்ளார். இதன்மூலம் இந்த கவுரவத்தை பெறும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார். தீபிகா உடன் பிரிட்டன் நடிகை எமிலி பிளன்ட், பிரெஞ்ச் நடிகர் டிமோதி சால்மெட் மற்றும் ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் ஆகியோரும் இதே பிரிவில் தேர்வாகி உள்ளனர். பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த கவுரவம் தீபிகாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கவுரவத்தால் உலக அரங்கில் இந்தியாவை மேலும் இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் (Hollywood Walk of Fame) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது ஹாலிவுட் பவுல்வார்ட் மற்றும் வைன் ஸ்ட்ரீட் ஆகியவற்றில் பரவியுள்ள நடைபாதையில், திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிரபலத்தின் பெயர் மற்றும் அவர்கள் சாதனை புரிந்த துறையைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.