இயக்குனருடன் தீபிகா மோதலா?
பாலிவுட் டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான ஃபரா கானும், தீபிகா படுகோனும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஃபரா கான், ‘இப்போதுதான் தீபிகா படுகோன் 8 மணி நேரம் வேலை செய்கிறாரே. அவரால் இந்நிகழ்ச்சிக்கு எப்படி வர முடியும்? அவருக்கு எங்கே நேரம் இருக்கிறது?’ என்றார். அவரது காமெடி பேச்சு பாலிவுட்டில் பலத்த விவாதத்தை கிளப்பியது. இதையறிந்து டென்ஷனாகிவிட்ட தீபிகா படுகோன், அவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதை நிறுத்தியதாகவும், அதுபோல் ஃபரா கான் தீபிகா படுகோனையும், ரன்வீர் சிங்கையும் பின்தொடர்வதை நிறுத்தி விட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த சர்ச்சை குறித்து ஃபரா கான் கூறுகையில், ‘இன்ஸ்டாகிராமில் நாங்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரவே இல்லை’ என்றார். துவா என்ற மகளை பெற்றெடுத்த தீபிகா படுகோனை பார்த்த சிலரில் நானும் ஒருத்தி என்ற அவர், இதற்கு முன்பு இந்தியில் இயக்கிய ‘ஓம் சாந்தி ஓம்’, ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய படங்களில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். அப்போது முதல் அவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது.