தீபிகாவுக்கு வில்லன் திடீர் ஆதரவு
இந்திய திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், படப்பிடிப்பில் தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும் என்று சொன்னது தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார், பாலிவுட் முன்னணி வில்லனும், குணச்சித்திர நடிகருமான நவாசுதீன் சித்திக். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு அதுபற்றி அதிகம் தெரியாது. அவரது கருத்தை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால், எது சவுகரியமான வேலை நேரமாக இருக்கிறதோ, அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்.
அது உங்களை சோர்வடைய செய்யாமல், எளிதில் வேலைகளை முடித்து கொடுக்கும்படி இருக்க வேண்டும்’ என்றார். இது மறைமுகமாக ஆண், பெண் நடிகர்களுக்கு சமமான 8 மணி நேர வேலை என்ற தீபிகா படுகோன் கோரிக்கையை ஆமோதிப்பது போல் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
