தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு: சோஷியல் மீடியாவில் சலசலப்பு

மும்பை: ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் ஷேக் ஜாயித் கிராண்ட் மசூதி உள்ளது. மிக பிரமாண்டமான இந்த மசூதியை பார்க்க உலகமெங்கிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த மசூதிக்குள் வரும்போது யாரும் ஷாட்ஸ் அணிந்து வரக்கூடாது. தலை முகம் தவிர முழு உடலும் மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும். பெண்களுக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் தரப்படும். அதை அணிந்தே உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.

இந்நிலையில் இந்த மசூதி வளாகத்தில் விளம்பர படத்துக்கான படப்பிடிப்பு நடந்தது. இதில் தீபிகா படுகோனே, அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் இணைந்து நடித்தார்கள். அப்போது தீபிகா ஹிஜாப் அணிந்து இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்த இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்டவை சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்ைவத்தன. இந்து பெண்ணான தீபிகா, ஹிஜாப் அணிந்து எப்படி நடிக்கலாம் என பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர். அதே சமயம், தீபிகாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.