ஷாருக்கானுடன் தொடர்ந்து நடிப்பது ஏன்?தீபிகா படுகோன் விளக்கம்
மும்பை: இந்தியில் ஷாருக்கானுடன் ‘கிங்’ படத்தில் நடிக்கும் தீபிகா படுகோன், ஷாருக்கான் கையை பிடித்துக் கொண்டிருக்கும் போட்டோவை தனது சோஷியல்
மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், `கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற படத்தில் நான் நடித்தபோது, ஷாருக்கான் கற்றுக்கொடுத்த முதல் பாடத்தில், ‘படத்தின் வெற்றியை விட, படத்தை தயாரிப்பது மற்றும் யாருடன் சேர்ந்து நடிக்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்தார். அதனால் நான் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வது இல்லை.
ஷாருக்கான் சொன்னதில் இருந்து, நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் அவர் கற்றுக்கொடுத்ததை பயன்படுத்தி வருகிறேன். அதனால்தான் நாங்கள் 6வது படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த ஜோடியின் எல்லா படங்களும் ஹிட்டாகி விடுவதால், ‘கிங்’ படத்திலும் தீபிகா படுகோனையே ஷாருக்கான் ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கான் அறிமுகமாகிறார். தற்போது அவர் விளம்பர படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.