டென்மார்க்கில் செட்டில் ஆகிவிட்டேனா? ஆவேசம் அடைந்த டாப்சி
சென்னை: தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து இந்தியிலும் திரைப்படங்கள், வெப்தொடர்கள், விளம்பரங்களில் பிசியாக நடித்து வரும் டாப்சி, தனது நீண்ட நாள் காதலர் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில், டாப்சி தனது கணவருடன் டென்மார்க்கில் நிரந்தரமாக குடியேறியுள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்து ஆவேசம் அடைந்த டாப்சி, ‘இதைவிட குறைந்த அளவிலான பொய்யுடன் பரபரப்பான தலைப்பு கிடைக்கவில்லையா? சிறிதளவாவது இதுபற்றி விசாரித்து எழுதுங்கள். இந்த ஈரப்பதமான மும்பையில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற ஒரு வதந்தியை நான் படிக்கிறேன்’ என்றார்.
