போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் காலமானார்
சென்னை: 1000 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் காலமானார். தென்னிந்திய சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.
கே. பாலசந்தர், பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, விக்ரம், எஸ் ஜே சூர்யா, தரணி உள்ளிட்ட பல தலைமுறைகளை சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்களின் படங்களுக்கு அவர்களுடன் இணைந்து குமார் பணியாற்றியுள்ளார். 'விக்ரம்' முதல் 'சபாஷ் நாயுடு' வரை கமல்ஹாசனின் படங்களுக்கு அவர் தொடர்ந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் மறைவுக்கு திரை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட தகவல்களை குமாரின் மகனும் இசையமைப்பாளருமான கே எஸ் சுந்தரமூர்த்தி கூறியுள்ளார்.