ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘தேவரா 2’
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த ‘தேவரா’ என்ற படம், மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இதில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்தார். இப்படத்தின் மூலம் அவர் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானார். தற்போது ராம் சரண் ஜோடியாக ‘பெத்தி’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ‘தேவரா’ படம் முதல் நாளில் 172 கோடி ரூபாயும், 3 நாட்களில் 307 கோடி ரூபாயும், பிறகு உலகம் முழுக்க 500 கோடி ரூபாய்க்கு மேலும் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், ‘தேவரா 2’ படம் கைவிடப்பட்டதாக இணையதளங்களில் செய்தி வெளியானது. அதை மறுத்த படக்குழு, ‘தேவரா’ படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ‘தேவரா 2’ படத்தின் அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.