தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தனுஷுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே

சென்னை: தமிழில் வெளியான ‘போர் தொழில்’ என்ற படத்தின் மூலம் பல்வேறு தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் விக்னேஷ் ராஜா, அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இதில் தனுஷ் ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

சாய் அபயங்கர் இசை அமைக்கவும் கேட்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற பாடலுக்கு ஆடியிருந்த பூஜா ஹெக்டே, தமிழில் ‘ஜன நாயகன்’, ‘காஞ்சனா 4’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. ‘அமரன்’ வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறது.