தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தனுஷுடன் காதல் வதந்தி சிரிப்பு, சிரிப்பாக வருகிறது: மிருணாள் தாக்கூர்

மும்பை: கடந்த சில நாட்களாக தனுஷ், மிருணாள் தாக்கூர் இருவரும் தீவிரமாக காதலிப்பதாக தகவல் வெளியாகி வந்தது. அவர்கள் சம்பந்தப்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. தனுஷ் கடந்த 1983 ஜூலை 28ம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 42. மிருணாள் கடந்த 1992 ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 33. ...

மும்பை: கடந்த சில நாட்களாக தனுஷ், மிருணாள் தாக்கூர் இருவரும் தீவிரமாக காதலிப்பதாக தகவல் வெளியாகி வந்தது. அவர்கள் சம்பந்தப்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. தனுஷ் கடந்த 1983 ஜூலை 28ம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 42. மிருணாள் கடந்த 1992 ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 33.  இருவருக்கும் 9 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கிறது என்றும், தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் சிம்ம ராசிக்காரர்கள் என்றும் நெட்டிசன்கள் பரபரப்பாக பதிவிட்டு வருகின்றனர்.

வட இந்திய மீடியாக்கள், ‘அவர்கள் காதலிப்பது உண்மை. இதுகுறித்து மக்களிடமோ, மீடியாவிடமோ சொல்ல மாட்டார்கள். வெளியே செல்வது மற்றும் வெளிப்படையாக தெரிவது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளன.  இந்நிலையில் மிருணாள் தாக்கூர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நானும், தனுஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் வேறெந்த தொடர்பும் இல்லை. ‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தின் நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்றதை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

தனுஷையும், என்னையும் இணைத்து பரவி வரும் காதல் வதந்தியை பார்க்கும்போது சிரிப்பு, சிரிப்பாக வருகிறது. ‘சன் ஆஃப் சர்தார் 2’ நிகழ்ச்சிக்கு தனுஷை அஜய் தேவ்கன் பேசி அழைத்து வந்தார். அதில் நாங்கள் இணைந்து பங்கேற்றதுதான் மற்றவர்கள் இப்படி பேசுவதற்கு காரணம்’ என்று, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.