தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தனுஷ் பட நடிகையிடம் ரசிகர் சில்மிஷம்: அடித்து விரட்டிய பவுன்சர்கள்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரசிகரை பவுன்சர்கள் அடித்து விரட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியில் தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘நே ஒக்கடெய்னே’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்...

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரசிகரை பவுன்சர்கள் அடித்து விரட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியில் தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘நே ஒக்கடெய்னே’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் புனேயில் உள்ள ஒரு மாலில் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார்.

கீர்த்தி சனோன் வருவதை அறிந்து அங்கு பெரும் கூட்டம் சேர்ந்தது. நிகழ்ச்சி முடித்துவிட்டு கீர்த்தி சனோன் செல்லும்போது, அவர் கூட்டத்தில் சிக்கினார். பலரும் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தில் கீர்த்தி சனோனுக்கு பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள் பின்னால் தள்ளப்பட்டனர். அந்த சமயம் பார்த்து ரசிகர் ஒருவர் கீர்த்தி சனோனின் இடுப்பில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் கலங்கிப்போன கீர்த்தி சனோன், கூச்சலிட ஆரம்பித்தார். அவரது சத்தம் கேட்டு, ரசிகர்களை தள்ளிக்கொண்டு வந்த பவுன்சர்கள், கீர்த்தியிடம் விசாரித்தனர். அப்போது குறிப்பிட்ட நபரின் செயலைப் பற்றி அவர் சொல்லியதும், அந்த நபரை பிடித்து பவுன்சர்கள் அடித்துள்ளனர். அடி தாங்காமல் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். பிறகு பவுன்சர்கள் கீர்த்தி சனோனை பாதுகாப்பாக அங்கிருந்து மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.