சென்னை: ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த ‘ராஞ்சனா’ படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமாகி இருந்தார். இந்தப் படம் 2013-ம் ஆண்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. இதை இப்போது அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக.1-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கிறது....
சென்னை: ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த ‘ராஞ்சனா’ படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமாகி இருந்தார். இந்தப் படம் 2013-ம் ஆண்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. இதை இப்போது அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக.1-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கிறது. ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் படமான இது புதிய கிளைமாக்ஸ் காட்சியுடன் 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன் வெளியாக இருக்கிறது. இந்தியில் ராஞ்சனா படம், ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. இதற்கு முன் அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படத்தையும் அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் ரீரிலீஸ் செய்திருந்தது. ஜூலை 28ம் தேதி தனுஷின் பிறந்த நாளையொட்டி இப்படத்தை மீண்டும் வெளியிடுகின்றனர்.