தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தேவயானியிடம் அடி வாங்கினாரா ராஜகுமாரன்?

மகிழினி கலைக்கூடம் சார்பில் சாரதா மணிவண்ணன், மகிழினி இணைந்து தயாரித்துள்ள படம், ‘வீரத்தமிழச்சி’. சுரேஷ் பாரதி எழுதி இயக்கியுள்ளார். சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி, கே.ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி நடித்திருக்கின்றனர்.

சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜூபின் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனரும், நடிகருமான ராஜகுமாரன், ‘அடிக்க வேண்டும் என்பதற்காக பெண்களுக்கு தனி பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அடித்தால் நம்மால் தாங்க முடியாது என்பதே உண்மை. அவர்கள் நம்மை அடிக்காமல் இருக்கிறார்களே என்பது வரைதான் நமக்கு பெருமை. அவர்கள் அதிபயங்கர மன உறுதியும், உடல் வலிமையும் கொண்டவர்கள்.

அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், நமக்கு வலிமை குறைவு. தங்களை மலை போல் காண்பிப்பதில் ஆண்களுக்கு ஒரு கற்பனையும், தங்களை மலர் போல் காண்பிப்பதில் பெண்களுக்கு ஒரு கற்பனையும் இருக்கிறது. ஆனால், நாம் காண்பது மலரல்ல. இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நிறைய பெண்களிடம் அடி வாங்கியிருக்கிறேன். என் அம்மாவை போல் கம்பீரமான, மலை போன்ற உறுதியான பெண்மணியை இதுவரை நான் சந்தித்தது இல்லை. அதுபோல் தேவயானி, பார்ப்பதற்கு புஷ்பம் போல் இருப்பார். ஆனால், அவர் மிகவும் உறுதியான, வலிமையான, ஒரே அடியில் ஒரு டன் அல்ல; இரண்டு மூன்று டன் வெயிட்டுடன் அடிக்கக்கூடிய ஒரு பயங்கரமான பெண்மணி. பெண்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள். ஆண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் நம்மிடம் மென்மையாக நடந்துகொள்கின்றனர்’ என்றார்.