இராக்கதன்
பாபு கிறிஸ்டியன், தினேஷ் கலைச்செல்வன் பாடல்கள் எழுதியுள்ளனர். மருதம் புரொடக்ஷனுக்காக ராணி ஹென்றி சாமுவேலுடன் இணைந்து எம்.ஏ.ஜி.பாஸ்கர் தயாரித்துள்ளார். தினேஷ் கலைச்செல்வன் கூறுகையில், ‘இராக்கதன் என்றால் அரக்கன் என்று பொருள். இரா என்பது இரவையும், கதன் என்பது ஒரு ஆணையும் குறிக்கிறது. இது இரவு நேர ஆண் என்ற மற்றொரு பொருளையும் உள்ளடக்கியது. இந்த சமூகத்தில் கலாச்சார சீரழிவு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்தான். இப்படத்தின் கதை வெவ்வேறு கோணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. முழுநீள கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது’ என்றார்.