படம் இயக்கும் கென் கருணாஸ்
‘அசுரன்’, ‘வாத்தி’, ‘விடுதலை 2’ உள்பட சில படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கென் கருணாஸ், தற்போது ஹீரோவாக நடித்து இயக்குனராக அறிமுகமாகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. முக்கிய கேரக்டர்களில் அனிஸ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி நடிக்கின்றனர்.
விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நாஷ் எடிட்டிங் செய்ய, ராமு தங்கராஜ் அரங்கம் அமைக்கிறார். பள்ளிக்கூட பின்னணியில் உருவாகும் இப்படத்தை பார்வதா எண்டர்டெயின்மெண்ட், ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ சார்பில் கருப்பையா சி.ராம், காளி ராஜ்குமார், சுலோசனா குமார் இணைந்து தயாரிக்கின்றனர். கருணாஸ், கிரேஸ் ஆகியோரின் மகன்தான் கென் கருணாஸ்.
