தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

பாம் படத்துக்காக உருவான கற்பனை உலகம்: இயக்குனர் தகவல்

சென்னை: அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, கிச்சா ரவி நடித்துள்ள படம், ‘பாம்’. ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் இணைந்து கதை, திரைக்கதை...

சென்னை: அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, கிச்சா ரவி நடித்துள்ள படம், ‘பாம்’. ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.

படம் குறித்து அவர் கூறியதாவது: உலகின் எந்த மூலையிலும் எளிதில் நடக்கக்கூடிய கதையுடன், முழுநீள காமெடி படமாக உருவாகியுள்ளது. குறிப்பிட்ட இடத்தை சொன்னால் பிரச்னை ஏற்படும் என்பதால், நாங்களே ஒரு கற்பனை உலகை படைத்தோம். அதிலுள்ள ஒரு ஊரில் நடக்கும் பிரச்னையை படம் மையப்படுத்துகிறது. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு தரப்பினருக்கும், நம்பிக்கை இல்லாத மற்றொரு தரப்பினருக்குமான பிரச்னையால் பிரிந்திருக்கும் ஊரை, இரு நண்பர்கள் எப்படி இணைக்கின்றனர் என்பது திரைக்கதை. நண்பர்களாக அர்ஜூன் தாஸ், காளி வெங்கட் நடித்துள்ளனர். ஆகஸ்ட்டில் படம் திரைக்கு வருகிறது.