இயக்குனர் அமீர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டறில் அமீரின் பாதி முகத்தைக் காட்டுகிறது, மறுபுறத்தில் ஒரு ஜோடியின் நிழல் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படம் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் அமீர் பிலிம் கார்ப்பரேஷனின் கீழ் தயாராகிறது.
ரமேஷ் பால கிருஷ்ணன் இயக்கத்தில் "மாயவலை" படத்தில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அமீர் இயக்கிய ராம், பருத்திவீரன் மற்றும் மௌனம் பேசியதே ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
