தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

இயக்குனராக மாறிய குணச்சித்திர நடிகை

எழுத்தாளரும், குணச்சித்திர நடிகையுமான செம்மலர் அன்னம் எழுதி இயக்கியுள்ள முதல் படம், ‘மயிலா’. நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் வழங்குகிறார். இப்படம் 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், பிரைட் பியூச்சர் என்ற பிரிவில், வரும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை காட்சிப்படுத்தப்படும் அனைத்து மொழி படங்களில் ஒன்றாக திரையிடப்படுகிறது. கிராமத்து பின்னணியில் தனது சுதந்திரம் மற்றும் சுயமரியாதையை காப்பாற்ற போராடும் பெண்ணின் கதை படமாக்கப்பட்டுள்ளது.

மயிலாவாக மெலோடி டார்கஸ், வி.சுடர்கொடி, கீதா கைலாசம், சத்யா மருதாணி, ஆட்டோ சந்திரன், ஆர்ஜே பிரியங்கா, ஜானகி சுரேஷ் நடித்துள்ளனர். வினோத் ஜானகிராமன் ஒளிப்பதிவு செய்ய, மீனாட்சி இளையராஜா பின்னணி இசை அமைத்துள்ளார். ஏ.கர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் திரையில் 97 நிமிடங்கள் வரை ஓடும்.