இயக்குனர் வேலு பிரபாகரன் மரணம்
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் (68) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஒளிப்பதிவாளராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய வேலு பிரபாகரன் ‘நாளைய மனிதன்’,...
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் (68) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஒளிப்பதிவாளராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய வேலு பிரபாகரன் ‘நாளைய மனிதன்’, ‘அதிசய மனிதன்’, ‘அசுரன்’, ‘ராஜாளி’, ‘கடவுள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக ‘கடந்த 2017ல் ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ என்ற படத்தை இயக்கி, நடித்தார். மேலும், ‘வெப்பன்’, ‘ரைடு’, ‘ஜாங்கோ’ போன்ற பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை ஜெயதேவியை மணந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட 25 வயது குறைந்த நடிகை ஷெர்லி தாஸை இரண்டாவது திருமணம் செய்தார்.