தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விவாகரத்து குறித்து ஐஸ்வர்யா பேச்சு

முன்னாள் உலக அழகியும், முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது காதல் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுபற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை. கடந்த ஆண்டு நடந்த முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்துக்கு ஐஸ்வர்யா ராய் தனியாக வந்தார். அதுபோல், அமிதாப் பச்சன் குடும்பமும் தனியாக வந்தது. அமிதாப் பச்சன் குடும்பத்தில் இருந்து பிரிந்த ஐஸ்வர்யா ராய், தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக வசிப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு அவர்கள் பங்கேற்ற டி.வி நிகழ்ச்சியில் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியை நடத்திய ஒருவர், விவாகரத்து குறித்து ஐஸ்வர்யா ராயிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், ‘விவாகரத்து குறித்து நாங்கள் கனவில் கூட நினைத்தது இல்லை’ என்று குறிப்பிட்டார். அபிஷேக் பச்சன் தாயார் ஜெயா பச்சன் குறித்த கேள்விகளை ஐஸ்வர்யா ராய் தவிர்த்தார். அபிஷேக் பச்சன் முதன்முதலில் எப்படி காதலை தெரிவித்தார் என்ற தகவலை பகிர்ந்தார். அமெரிக்க படப்பிடிப்பில் பங்கேற்றபோது, ஓட்டல் அறை பால்கனியில் நின்று பேசும்போது, ‘என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று ஐஸ்வர்யா ராயிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார்.