தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விவாகரத்து நடிகையின் 2வது திருமணம்

தமிழில் ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘கேம் ஆஃப் லோன்ஸ்’, ‘வெட்டு’ ஆகிய படங்களில் நடித்தவர், எஸ்தர் நோரோன்ஹா. 33 வயதான நடிகையும், பாடகியுமான அவர், தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, துளு, கொங்கணி ஆகிய மொழிகளில் உருவான படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2019ல் பாடகர் நோயலை காதல் திருமணம் செய்த அவர், ஒரே வருடத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.

கடந்த 12ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய எஸ்தர் நோரோன்ஹா வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது வாழ்க்கையில் இன்னொரு அழகான ஆண்டை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார். எனக்கான அற்புதங்களையும், வாய்ப்புகளையும் வழங்கியதற்காக என் இதயத்தின் ஆழத்தில் இருந்து கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என் பிறந்தநாளில் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பொழிந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு புதிய அறிவிப்பு இருக்கிறது. அதை நான் விரைவில் அறிவிப்பேன்.

அதுவரை என்ன, ஏது என்று விசாரிக்காமல் காத்திருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை படித்த நெட்டிசன்கள், ‘அவர் என்ன புதிதாக சொல்லிவிட போகிறார்? தனது இரண்டாவது திருமணத்தை யாருடன், எங்கே நடத்துகிறார் அல்லது நடத்தி முடித்துள்ளார் என்பதையே சொல்வார். அதற்கு ஏன் இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்?’ என்று கமென்ட் செய்துள்ளனர்.