தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆகஸ்டில் வெளியாகும் டிஎன்ஏ

சென்னை: ‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமாரின் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் படம் டிஎன்ஏ அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் தவிர இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘டிஎன்ஏ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது....

சென்னை: ‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமாரின் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் படம் டிஎன்ஏ அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் தவிர இயக்குநர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘டிஎன்ஏ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இதற்கு முன் ‘பர்ஹானா’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களை உருவாக்கி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தை வரும் ஆகஸ்ட்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.