மலைவாழ் மக்கள் கதையில் டாக்டர்
ஹரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ.அழகு பாண்டியன் தயாரிக்க, சுபாரக்.எம் எழுதி இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் படம், ‘நறுவீ’. வரும் 29ம் தேதி படம் திரைக்கு வருகிறது. மருத்துவம் படித்துவிட்டு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் வின்சு, விஜே பப்பு, பாடினி குமார், ‘ஜீவா’ ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா நடித்துள்ளனர். ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வத் இசை அமைத்துள்ளார். சுபாரக்.எம் எடிட்டிங் செய்ய, சி.கே.சக்திவேல் அரங்கம் அமைக்கிறார்.
புகழேந்தி கோபால், சங்கவி ஜி.வி பாடல்கள் எழுதியுள்ளனர். பாஸ்கர் சினிமா கம்பெனி, ஷிவானி ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை வெளியிடுகின்றன. மலைவாழ் மக்களின் குழந்தைகள், கல்வி பற்றிய விழிப்புணர்வை கட்டாயம் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில், போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.