சொட்ட சொட்ட நனையுது விமர்சனம்
இளம் வயதிலேயே வழுக்கை தலையுடன் காணப்படும் நிஷாந்த் ரூசோவை திருமணம் செய்ய சில பெண்கள் மறுத்துவிடுகின்றனர். இதனால் மனம் வெறுத்த நிஷாந்த் ரூசோ, சென்னையில் ஒரு டாக்டரை சந்தித்து, தலைமுடி வளர்வதற்கான நவீன சிகிச்சையை மேற்கொண்டு ஊருக்கு திரும்புகிறார். அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் ஷாலினி அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.
தாலி கட்ட சிறிது நேரம் இருக்கும் நிலையில், திடீரென்று நிஷாந்த் ரூசோ திருமணத்தை நிறுத்திவிடுகிறார். அதற்கு என்ன காரணம்? அவரது வழுக்கை தலையில் முடி முளைத்தது உண்மையா என்பது மீதி கதை. நிஷாந்த் ரூசோ நடிப்பு, நிறைவு. மற்றும் வர்ஷினி வெங்கட், ஷாலினி, ரோபோ சங்கர், புகழ், ராஜா, யோகி, வினோத் போன்றோரின் நடிப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது.
காரைக்குடியை வித்தியாசமாக காட்டி, கதையை நடத்திச் சென்றிருக்கிறது ரயீஷ் ஒளிப்பதிவு. ‘ஜிமிக்கி கம்மல்’ ரெஞ்சித் உன்னி இசையில் பாடல்களை கேட்கலாம். ராஜா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரின் சீரியசான வழுக்கை தலை பிரச்னையை காமெடியாக சொன்ன இயக்குனர் நவீத் எஸ்.பரீத், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தொடர்ச்சியான காட்சிகள், படம் நீளமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.