துச்சாதனன் செப்.12ல் ரிலீஸ்
சென்னை: விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் ‘துச்சாதனன்’ திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விகாஷ், சிங்கம்புலி, தமிழ் செல்வி, மணிமாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தளபதி இயக்கியுள்ளார். இசை விஜய் பிரபு, ஒளிப்பதிவு பாலமுருகன். படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது,...
சென்னை: விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் ‘துச்சாதனன்’ திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விகாஷ், சிங்கம்புலி, தமிழ் செல்வி, மணிமாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தளபதி இயக்கியுள்ளார். இசை விஜய் பிரபு, ஒளிப்பதிவு பாலமுருகன். படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘‘இன்று சமூகத்தில் நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் காரணம் ஒழுக்கக் கேடுதான். அப்படி ஒழுக்கக் கேட்டால் நடந்த விபரீதம் என்ன, அதற்கு காவல்துறை எடுத்த நெஞ்சைப் பதறவைக்கும் நடவடிக்கை என்ன என்பதே படத்தின் கதை’’ என்றார்.