தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

டியூட் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது: பிரதீப் ரங்கநாதன்

சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கிய படம், ‘டியூட்’. பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, ஹிருது ஹாரூன் நடித்திருந்தனர். நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசை அமைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிபெற்ற இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ‘பல காட்சிகளில் மமிதா பைஜூவின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்படத்தின் கதை நிறைய விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இது நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி’ என்றார். கீர்த்தீஸ்வரன் பேசும்போது, ‘பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றி ெகாடுத்திருக்கிறார். அவரது ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் மாபெரும் சாதனை படைத்திருக்கிறது’ என்றார்.