துல்கர் சல்மான் படத்தில் ருஹானி சர்மா
சென்னை: திரைக்கு வந்த ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய பான் இந்தியா படங்கள் வெற்றிபெற்றதை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்படும் துல்கர் சல்மான், தனது தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற படம் 290 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளதை கொண்டாடி வருகிறார். தற்போது ‘காந்தா’, ‘ஐ ஆம் கேம்’ ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.
மேலும், தெலுங்கில் பவன் சாதினேனி இயக்கத்தில் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்தில் அவரும், சாத்விகா வீரவள்ளியும் இணைந்து நடிக்கும் நிலையில், தற்போது இன்னொரு ஹீரோயினாக ருஹானி சர்மா இணைந்திருக்கிறார். தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழி களில் நடித்துள்ள ருஹானி சர்மா, துல்கர் சல்மான் படத்தில் நடிப் பதை நினைத்து சந்தோஷப்படுகிறார். இது அவருக்கு கிடைத்த பம்பர் ஆஃபர் ஆகும். ஏற்கனவே ருஹானி சர்மா, ‘கடைசி பெஞ்ச் கார்த்திக்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘மாஸ்க்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.