தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

உடல் மெலிந்த டுவெய்ன் ஜான்சன்: ரசிகர்கள் ஷாக்

லாஸ் ஏஞ்சல்ஸ், செப்.4: ஹாலிவுட் படங்களை ரசிப்பவர்களால் ‘தி ராக்’ என்று அழைக்கப்படுபவர் டுவெய்ன் ஜான்சன். கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டவர். திரையிலும் மற்றும் ஸ்டண்ட் நிகழ்விலும் அவரது உடலமைப்பு மிகப்பெரிய அடையாளமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி வெனிஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற அவரை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், டுவெய்ன் ஜான்சன்,...

லாஸ் ஏஞ்சல்ஸ், செப்.4: ஹாலிவுட் படங்களை ரசிப்பவர்களால் ‘தி ராக்’ என்று அழைக்கப்படுபவர் டுவெய்ன் ஜான்சன். கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டவர். திரையிலும் மற்றும் ஸ்டண்ட் நிகழ்விலும் அவரது உடலமைப்பு மிகப்பெரிய அடையாளமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி வெனிஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற அவரை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம், டுவெய்ன் ஜான்சன், மெலிந்த தோற்றத்துக்கு மாறி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். முன்னதாக டுவெய்ன் ஜான்சன் அளித்த பேட்டியில், ஆரோக்கியம் குறித்த தனது பார்வை மாறியிருப்பதாக சொன்னார். ஒருமுறை மருத்துவர்கள் அவரை இதய நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர். பிறகு உண்மையான பிரச்னை குடலில் இருப்பது கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளாக அவர் ஆன்டிபயாட்டிக் எடுத்து வந்ததே இதற்கு காரணம் என்று தெரிந்தது.

இந்த சம்பவத்துக்கு பிறகு கச்சிதமாக தோற்றமளிப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி அல்ல என்பதை டுவெய்ன் ஜான்சன் உணர்ந்தார். ஆரோக்கியம் என்பது தசைகள் பெரிய சைஸில் இருப்பது மட்டுமல்ல என்றும் அவர் பேசியுள்ளார். இதுவே அவர் உடல் எடை குறைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் சொல்கின்றனர்.