பூகம்பம் விமர்சனம்...
உருவகேலியால் பாதிக்கப்பட்டு, சிறுவயதிலேயே தந்தை மற்றும் தம்பியை பிரிந்து அநாதை இல்லத்தில் வளரும் இஷாக் உசைனி, அரசியலுக்கு வந்த பிறகு தந்தையையும், தம்பியையும் கொல்ல முயற்சிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. தொழிலதிபர், அரசியல்வாதி, கல்லூரி மாணவர் என்று, மாறுபட்ட இரட்டை வேடங்களில் தோன்றும் இஷாக் உசைனி, இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
சாத்தானை வழிபடும் வில்லன் மற்றும் தில்சானா, ஹேமா, ரிஷத், என்.எம்.இலியாஸ், மும்பை மல்ேஹாத்ரா ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர். தயாள் ஓஷோ, தேவராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு, சதாசிவ ஜெயராமனின் இசை இதம். புதிய யுக்தியுடன் கதை சொல்ல முயற்சித்து, தொழில்நுட்ப விஷயங்களில் பாதி கிணறு தாண்டியிருக்கிறார், படத்தை எழுதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் இஷாக் உசைனி. உருவாக்கத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்க வேண்டும்.