இந்தியாவின் எடிசனாக மாறிய மாதவன்
அறிவியல் மற்றும் விவசாய விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ‘ஜிடிஎன்’ என்ற படத்தில், இந்தியாவின் எடிசன் என்று கொண்டாடப்படும் ஜி.டி.நாயுடு வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இதற்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை சொன்ன ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். கோவையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரை தமிழக அரசு சூட்டியிருக்கிறது. இந்நிலையில், ‘ஜிடிஎன்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் அனைவரையும் ஈர்த்துள்ளது.
தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற படத்தை தொடர்ந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தை நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். முக்கிய வேடங்களில் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமய்யா, விநய் ராய் நடிக்கின்றனர். தற்போது கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வர்கீஸ் மூலன், விஜய் மூலன், ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரிக்கின்றனர். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்து, கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். அடுத்த ஆண்டு ேகாடை விடுமுறையில் படம் ரிலீசாகிறது.
