தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ரசிகரின் செயலால் ஆவேசம் அடைந்த ஜூனியர் என்டிஆர்

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி ஹீரோ ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படம், ‘வார் 2’. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அப்போது ஜூனியர் என்டிஆர் பேசினார். ஆனால், அவரை தொடர்ந்து பேசவிடாமல் ஒரு ரசிகர் இடையூறு செய்தார். அதாவது, ஜூனியர் என்டிஆர் பேசினால், கூடவே அந்த ரசிகர் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தார். இதனால்...

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி ஹீரோ ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படம், ‘வார் 2’. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அப்போது ஜூனியர் என்டிஆர் பேசினார். ஆனால், அவரை தொடர்ந்து பேசவிடாமல் ஒரு ரசிகர் இடையூறு செய்தார். அதாவது, ஜூனியர் என்டிஆர் பேசினால், கூடவே அந்த ரசிகர் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த ஜூனியர் என்டிஆர், ‘நான் தொடர்ந்து பேசட்டுமா? இல்லை, இந்த மேடையை விட்டு கிளம்பட்டுமா? மைக்கை கீழே வைத்துவிட்டு வெளியே செல்ல எனக்கு ரொம்ப நேரமாகாது. அமைதியாக இருங்கள்’ என்று சொன்ன பிறகே அந்த ரசிகர் உள்பட சிலரது சலசலப்பு பேச்சு அடங்கியது. இது அந்த அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.